
Sign up to save your podcasts
Or


My Temporary Son (A part of It) | Timery N. Murari | கொஞ்ச நாளைக்கு மகனாக வந்தவன் – 2 | S. ஷங்கரநாராயணன் |
Description
குறிப்பு:
My temporary son
timeri n. murari
திமெரி என். முராரியின் முதல் வேலை கனடாவின் ஆந்தோரியோவில் கிங்ஸ்டன் விக் ஸ்டாண்டர்ட் இதழில் நிருபர். புதிய ஆசிரியர் மாறியபோது என் தோல் நிறத்தால் பணி நீக்கப்பட்டேன், என்று குறிப்பிடுகிறார். பிறகு லண்டன் போய் கார்டியன், சன்டே டைம்ஸ் என பத்திரிகைளிலும் செய்தியிதழ்களிலும் எழுதினார். ‘திருமணம்‘ முதல் நாவல் இங்கிலாந்திலும் இந்தியாவிலும் வெளியிடப் பட்டது. இதுவரை 17 நூல்கள், பெரும்பாலும் நாவல்கள். அதிகப் பிரபலமானது தாஜ் நாவல். 14 மொழிகளில் அது மொழிபெயர்ப்பு கண்டது. 2002ல் ஆர்.கே.நாராயணன் விருது இவரது மொத்தமான எழுத்துப் பங்களிப்புக்கு என வழங்கப்பட்டது.
கதைத்தளம் புதிதாய், எழுதவேண்டியதாய் உணரமுடிந்தது. அதன்காரணமாகவே மொழிபெயர்ப்பின் நியாயமும் அமைந்துவிட்டது. கூறியதையே பல சமயங்களில் திரும்பத் திரும்பச் சொல்கிறாப் போல இருக்கிறது, என்றாலும் வாழ்வின் சத்தியம் பேசப்படுவதில் நெகிழ்ச்சிகரமான வாசிப்பு அனுபவம். படிக்கத் தவறவிட முடியாத கதையாகிறது. இதே தலைப்பிலான பெரிய நாவலின் பகுதி இது.
சொல்வனம் | இதழ் 22 | மார்ச் 31, 2010
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2010/03/31/கொஞ்ச-நாளைக்கு-மகனாக-வந்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice o: Saraswathi Thiagarajan
My Temporary Son (A part of It) | Timery N. Murari | கொஞ்ச நாளைக்கு மகனாக வந்தவன் – 1 | S. ஷங்கரநாராயணன் |
Description
குறிப்பு:
இந்தக் ’கதையை’ எழுதியவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டிமரி என். முராரி (Timery N. Murari). பல நாடுகளில் பத்திரிகையாளராகப் பணியாற்றியவர். நாவலாசிரியர், திரைக்கதையாளர், படத் தயாரிப்பாளர், நாடகாசிரியர், நாடகங்களை இயக்கியவர்.
இக்கதையை Nth position என்கிற ஒரு வலைப் பத்திரிகையில் பார்த்தோம். அங்கிருந்து எடுத்து, நல்ல மொழிபெயர்ப்பாளரும், தானே ஒரு நன்கறியப்பட்ட கதாசிரியருமான திரு.ஷங்கரநாராயணனிடம் கொடுத்து மொழிபெயர்க்கச் சொல்லிக் கேட்டோம். இடையில் திரு.முராரி இந்தியாவில், அதுவும் சென்னையில் தற்போது வசிக்கிறார் என்று அறிந்து வலையில் தேடினால் அவர் இந்தியாவை வைத்து நிறைய புத்தகங்கள் எழுதி இருக்கிறார் என்று தெரிந்தது. எழுதி அனுமதி கேட்டோம்.
இக்கதையைத் தமிழில் மொழிபெயர்க்கத் திரு முராரி தன் அனுமதியைச் சொல்வனத்துக்கு அளித்திருக்கிறார். அவருக்கு எங்கள் நன்றி.
இக்கதை அவருடைய ‘My Temporary Son’ என்ற ஆங்கிலப் புத்தகத்தில் ஒரு பகுதி என்பதை இங்கு வெளியிடச் சொன்னார்.
அப்புத்தகத்தின் விவரங்கள்: My Temporary Son, Penguin India, 2005, paperback. Rs. 250 ( இந்த சொல்வனம் இதழ் 21 வெளியிட்ட காலக்கட்டத்தில் இதன் விலை).
இது புனைகதை போல எழுதப்பட்டாலும் கதை இல்லை. திரு. முராரியும், மனைவி மௌரீனும் சில மாதங்கள் வளர்க்க நேரிட்ட ஒரு அனாதை இல்லக் குழந்தை அவர்கள் வாழ்வில் என்ன பாதிப்பு கொணர்ந்தான் என்பதை விவரிக்கிறார். இந்திய தத்தெடுப்பு சட்டங்களின் பல அடுக்குச் சிக்கல்கள், பன்னாட்டுத் தத்து, உள்நாட்டுத் தத்தெடுப்பு போன்ற பல முக்கியமான விஷயங்களைப் பற்றியும் எளிய சுவாரசியமான நடையில் இப்புத்தகம் பேசுகிறது. 45 வயதுக்கு மேலான பெற்றோருக்கு தத்துக் கொடுக்க இந்தியச் சட்டம், தத்து நிறுவனங்கள் அனுமதிப்பதில்லை என்பதால் முராரி, மௌரீன் தம்பதியர் அக்குழந்தையை பிறருக்கு விட்டுக் கொடுக்கிறார் என்பதை இப்புத்தகம் விளக்கும். வாசகர், பத்திரிகை விமர்சனங்களை இப்பக்கத்தில் காணலாம். இது ஒரு உணர்ச்சி மிக்க ஆனால் எங்கும் மிகைப்படுத்தப்படாத வித விவரிப்பைக் கொண்ட புத்தகம்.
இதை ஜீவத்துடிப்புடன் திறம்பட மொழிபெயர்த்துள்ள எஸ். ஷங்கரநாராயணனுக்குச் சொல்வனத்தின் நன்றி.
சொல்வனம் | இதழ் 21 |மார்ச் 19, 2010
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2010/03/19/கொஞ்ச-நாளைக்கு-மகனாக-வந/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice
: Saraswathi Thiagarajan
"கொத்தைப் பருத்தி" | சிறுகதை | கி. ரா. | KothaiParuthi | Short Story | Ki. Ra. |
Description
எழுத்தாளர் கி. ராஜநாராயணன்- ஒரு சிறு முன்னுரை
கரிசல் இலக்கியத்தின் தந்தை கி. ராஜநாராயணன்.
இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை.
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றினார்.
சாகித்ய அகாடமி விருது, இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016ம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச்சாதனை விருது[7] உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகளுக்குச்சொந்தக்காரர்.
2021ஆம் ஆண்டு தனது 99ஆம் வயதில் புதுச்சேரியில் கி. ரா இயற்கை எய்தினார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://archive.org/details/orr-10944_301-Kothai-Paruthi_NEW
ஒலி வடிவம்: சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
சொல்வனம்:எழுத்தாளர் கிருஷ்ணன் சங்கரனின் சிறுகதை "கதை சமைக்கும் விதிகள்"/Solvanam: KrishnanSankaran's story "KathaiSamaikumVithigal"
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2022/06/12/கதை-சமைக்கும்-விதிகள்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice: Saraswathi Thiagarajan
"காசி-பாதசாரி" | குறுநாவல் | பாதசாரி | "Kasi-Pathasari" |Long Story | Paadhasaari
எழுத்தாளர் பாதசாரி- ஒரு சிறு முன்னுரை. பாதசாரி என்ற புனைபெயர் கொண்ட பட்டதாரி எழுத்தாளர் நா.விஸ்வநாதன்கோயம்புத்தூரில் வசிக்கிறார். இது வரை 10 நூல்கள் வெளிவந்துள்ளன. அவை மீனுக்குள் கடல், பேய்க்கரும்பு, அன்பின் வழியது உயிர் நிழல், நெஞ்சோடு கிளத்தல், கண்மலர் - கவிதைகள், அகநதி - கவிதைகள், நினைவரவம் - நாட்குறிப்புகள், ஆன்றவிந்த சான்று ,நிழல்இலா ஒளி, ஊழ்த்துணை ஆகும்.
To read: / முழுவதும் வாசிக்க https://azhiyasudargal.wordpress.com/2009/11/23/காசி-பாதசாரி/
ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
S. Suresh | Short story | "KaNavayPathai" |எழுத்தாளர் |எஸ்.சுரேஷ் | "கணவாய்ப் பாதை" | சிறுகதை |
எழுத்தாளர் | எஸ். சுரேஷ் - சிறு அறிமுகம்
தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதுவதில் வல்லவர் எழுத்தாளர் எஸ். சுரேஷ்.
இவர் எழுதிய சிறுகதைத் தொகுப்பு 'பாகேஷ்ரீ' சுஜாதா உயிர்மை பரிசை பெற்றது. சொல்வனத்திலும், பதாகையிலும் இவரது சிறுகதைகள் வெளியாகியதோடு இவரது கட்டுரைத் தொடரான 'கவியின் கண்' பலரால் கவனிக்கப்பட்ட ஒன்று. திரையிசையில் கே.வி.மகாதேவன் பற்றி இவர் சொல்வனத்தில் எழுதிய கட்டுரை பலராலும் வெகுவாகப் பாராட்டப்பட்டது. இதைத் தவிரப் பல இசைக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவர் தனது இசைக் கட்டுரைத் தொகுப்பு ஒன்றை மின் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://padhaakai.com/2022/11/01/kanavai-padhai/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
எழுத்தாளர் கு. ப. ராஜகோபாலனின் சிறுகதை "கனகாம்பரம்"
Ku. Pa. Raa | Short story | "Kanakambaram" |எழுத்தாளர் |கு. ப. ரா | "கனகாம்பரம்" | சிறுகதை |
கு. ப. ராஜகோபாலன்- சிறு அறிமுகம்.
கு. ப. ரா என்று பரவலாக அறியப்பட்ட எழுத்தாளர் கு. ப. ராஜகோபாலன்
சிறுகதை, நாவல், கவிதை, வசன கவிதை, ஓரங்க நாடகம், திறனாய்வு, வாழ்க்கைவரலாறு, மொழிபெயர்ப்பு எனப் பலவகைப் படைப்புகளை அளித்தவரெனினும்அவரது சிறுகதைகளின் சிறப்பினால் “சிறுகதை ஆசான்” என்றுஅழைக்கப்படுகிறார்.
கு.ப.ரா.வின் எழுத்துக்கள் அனேகமாக ஆண் _ பெண் உறவுகளைஅடிப்படையாகக் கொண்டவை. ஆனால், அதை சூட்சுமமாகவும்கலையுணர்ச்சியுடனும் சொல்வதில் வல்லவர்.
கு.ப.ரா. 79 சிறுகதைகள், 8 நாடகங்கள், 21 கவிதைகள், 1 நாவல், 8 வாழ்க்கைவரலாற்று நூல்களைத் தனது 42 வயதுக்குள் எழுதியிருக்கிறார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://azhiyasudargal.blogspot.com/2010/09/blog-post_15.html?m=1
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
சுஜாதா தேசிகன் | சிறுகதை | கல்யாணி |Sujatha Desikan | Short Story | Kalyani
எழுத்தாளர் சுஜாதா தேசிகன்- ஒரு சிறு முன்னுரை
எழுத்தாளர் சுஜாதாவின் மீது உள்ள மிகுந்த பற்றால் ‘சுஜாதா தேசிகன்’ என்றபெயரில் பத்திரிக்கையிலும், சமூக ஊடகத்திலும் சிறுகதைகள், கட்டுரைகள்எழுதி வருகிறார்.
இரண்டு வருடத்துக்கும் மேலாக கல்கியில் கடைசிப் பக்கம் எழுதிவரும் சுஜாதா தேசிகன் பெங்களூருவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிகிறார். எழுத்தாளர் சுஜாதாவின் பாராட்டைப் பெற்றதுடன்
வெகுஜனப் பத்திரிகைகளிலும் தொடர்ந்து சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வரும்இவருக்கு வைணவத்தில் மிகுந்த ஈடுபாடு உண்டு. பல ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேசங்களுக்கு சென்று தன் அனுபவத்தைத் தொடர்ந்து எழுதிவருகிறார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2009/12/25/கல்யாணி/
ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
ஜெகதீஷ் குமார் | சிறுகதை | "கல்லளை" | Jegdeesh Kumar |short Story| "KallaLai"
Description
எழுத்தாளர் ஜெகதீஷ் குமார் - சிறு முன்னுரை
அமெரிக்காவில் கணித ஆசிரியராக பணி புரியும்
இவர் தமிழ் ஆங்கிலம்இரண்டிலும் சிறுகதைகள்,
கவிதைகள் மற்றும் தத்துவக் கட்டுரைகள் எழுதிவருகிறார்.
தமிழ் சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கமும்
செய்து வருகிறார். இவரது ஆங்கிலப் படைப்புகள்
ஸ்பில் வோர்ட்ஸ், பைக்கர் பிரஸ்போன்ற இதழ்களிலும்,
தமிழ்ப் படைப்புகள் வல்லினம், பதாகை, உயிரோசை
மற்றும் சொல்வனம் ஆகியவற்றிலும் வெளியாகியுள்ளன.
வலைத்தள முகவரிகள்
தமிழ் - http://jegadeeshkumark.blogspot.com/
ஆங்கிலம் - http://jegadeeshk.blogspot.com/
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2022/09/25/கல்லளை/
ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
எழுத்தாளர் | அசோகமித்திரன் | சிறுகதை | "காலமும் ஐந்து குழந்தைகளும்" | Ashokamitran |Short Story | Kalamum Ainthu KiLikaLum
எழுத்தாளர் அசோகமித்திரன்- ஒரு சிறுமுன்னுரை
தியாகராஜன் என்ற இயற்பெயர் கொண்ட அசோகமித்திரன் தன் தந்தையின் மறைவிற்குப் பிறகு சென்னைக்குக் குடியேறினார் . இவருடைய எழுத்து எளிமையும் மெல்லிய நகைச்சுவையும் கொண்டது.
அமெரிக்க இலக்கியங்களைத் தமிழில் அறிமுகம் செய்த தனிப்பெருமை
இவருக்குரியது.
1996-இல் "அப்பாவின் சிநேகிதர்" சிறுகதை தொகுப்புக்காகச் சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.
9 நாவல்கள், 16 சிறுகதைத் தொகுப்புகள், 2 குறுநாவல் தொகுப்புகள் 14 கட்டுரைத் தொகுப்புகள் 3 மொழிபெயர்ப்பு நூல்களுடன் ஆங்கிலத்திலும் ஒரு நூல் எழுதியுள்ளார்.
தமது 86 ஆம் அகவையில் இவர் இறந்தார்.
எழுத்தாளர் அசோகமித்திரனின் சிறுகதை "காலமும் ஐந்து குழந்தைகளும்"
நன்றி: http://www.projectmadurai.org
To read: / முழுவதும் வாசிக்க
https://www.sirukathaigal.com/சமுகநீதி/காலமும்-ஐந்து-குழந்தைகளு/
நன்றி: http://www.projectmadurai.org
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
From the publisher's feed