
Sign up to save your podcasts
Or


Solvanam: Writer A. Muttulingam's "KadavulaiAcharyapaduthu"/சொல்வனம்:எழுத்தாளர் அ. முத்துலிங்கத்தின் சிறுகதை "கடவுளை ஆச்சரியப்படுத்து"
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2015/03/29/கடவுளை-ஆச்சரியப்படுத்து/
ஒலி வடிவம், காணொளி: சரஸ்வதி தியாகராஜன்/Voice, Video: Saraswathi Thiagarajan
Solvanam: J. G. Ballard's Short story ‘The Dying Fall’/ சொல்வனம்: தமிழாக்கம்- Viswanath Sankar/ கடைசி வெற்றி
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2009/09/06/கடைசி-வெற்றி/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
மூலம்: “Other People” by Neil Gaimon, 2001, October/November issue of ‘The Magazine of Fantasy & Science Fiction.’
நீல் கே(ய்)மன் இங்கிலீஷில் இன்று எழுதும் எழுத்தாளர்களில் மிகப் பிரபலமானவர்களில் ஒருவர். ‘மண்மனிதன்’ (Sandman) என்று இவர் எழுதிய ஒரு சித்திர நாவல் வரிசைகளிலிருந்து, திரைக் கதைகள், சிறுவர் நாவல்கள், அதிகற்பனை நாவல்கள் என்று பல வகைப் புனைவுகள். பல வயதினரையும் இலக்காக வைத்து எழுதிய பல வகைப் புனைவுகளும் பிரபலமானதால் மேற்கின் இலக்கிய உலகில் அபூர்வமான திறமை உள்ளவர் என்று அறியப்படுகிறார். இவரைப் போன்ற பல வகைப் புனைகதைகளை எழுதி வெற்றியும், அங்கீகாரமும் பெற்றவர்கள் வெகு சிலரே. ரே பிராட்பரி, எச்.ஜி.வெல்ஸ், எட்கர் ஆலன் போ போன்ற சில ஆசிரியர்கள் நினைவுக்கு வருவர். அவர்களை ஒத்த ஆகிருதி உள்ளவர் இவர் என்பது திண்ணம்.
இந்தக் கதையில் வரும் ’லாஸரீனின் பெண்’ என்ற சித்திரவதைக் கருவி என்ன வகை என்ற விவாதம் வலையில் இன்னமும் நடக்கிறது. ஒரு பதில்- சோரம் போன கணவனுக்குக் கிட்ட வேண்டிய தண்டனையை அக்கருவி நிறைவேற்றும். அக்கருவியை மிக நெருக்கமாக அனுபவித்தான் என்று கெய்மன் எழுதியதன் உள்ளடக்கம் அதுதான் என்று வாசகர் ஒருவர் வாதிடுகிறார். கெய்மனிடம் இருந்து ஏதும் விளக்கமில்லை. ஆனால் விவிலியக் கதையான லாஸரஸுடன் ஒரு விதத்தில் தொடர்புள்ளது என்பது ஊகிக்கப்படலாம். மறுபடி மறுபடி உயிர்த்தெழும் ஒரு நபரின் வாழ்வை விவிலியம் கருணையின் குறியீடாக்குகிறது, இங்கோ அதே தலைகீழாக்கப் பட்டு, பெரும் துன்பத்துக்குப் பாதையாகக் காட்டப் படுகிறது என்று ஊகிக்கலாம்.
ThiNNai | K.S. Suthakar | Short Story |Jesus Handle|
திண்ணை | கே.எஸ்.சுதாகர் | சிறுகதை | "ஜீசஸ் ஹாண்டில்" |
எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர்- சிறு அறிமுகம்
யாழ்ப்பாணத்தில் வீமன்காமம், தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகக் கொண்டு இலங்கைப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்ற எழுத்தாளர் கே.எஸ்.சுதாகர் தற்போது அவுஸ்திரேலியாவில் இருக்கிறார். முப்பது சர்வதேச சிறுகதைப்போட்டிகளிலும், இரண்டு குறுநாவல் போட்டிகளிலும் பரிசு பெற்றுள்ளார்.
`எங்கே போகின்றோம்?’, `சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’ சிறுகதைத்தொகுதிகளும், `வளர் காதல் இன்பம்’ குறுநாவலும் மற்றும் 2022- ல் `பால்வண்ணம்’ சிறுகதைத்தொகுதியும் அச்சில் வெளிவந்துள்ளன.
அமேசான் கிண்டில் பதிப்பாக `மெல்பேர்ண் வெதர்’, `கார்காலம்’, `ஏன் பெண்ணென்று’ குறுநாவல்கள் வெளிவந்திருக்கின்றன.
To read: / முழுவதும் வாசிக்க
https://puthu.thinnai.com//ஜீசஸ்-ஹாண்டில்-சிறுகதை/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice, : Saraswathi Thiagarajan
இன்னொரு குதிரை | சிறுகதை | இரா. முருகன் | VaaLi | Short Story | Era Murugan |
இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.
நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.
இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்
ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.
To read: / முழுவதும் வாசிக்க
https://www.eramurukan.in/?p=163
ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
"IdamO ValamO" | Ezuthalar | Nanjil Nadan | short story | "இடமோ வலமோ" |எழுத்தாளர் | நாஞ்சில்நாடன் | சிறுகதை |
நாஞ்சில் நாடன்- சிறு முன்னுரை.
நவீன தமிழிலக்கியத்தின் முக்கியப்படைப்பாளிகளுள் நாஞ்சில் நாடன் ஒருவர். சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை ஆகிய தளங்களில் இயங்கி வருபவர். மரபிலக்கியம் சார்ந்து எழுதியும் பேசியும் வருகிறார். நாஞ்சில் மண் சார்ந்த வாழ்க்கையை எழுதியவர். அங்கதமும் வட்டார வழக்கும் கலந்த நாஞ்சில் நாடனின் எழுத்துமுறை பரவலாக வாசகர்களால் விரும்பப்பட்டும் விமர்சகர்களால் பாராட்டப்பட்டும் வருகிறது.
நாஞ்சில் நாடனின் "எட்டுத்திக்கும் மதயானை" அவருடைய குறிப்பிடத்தக்க நாவல். மும்பை குற்ற உலகைப் பின்னணியாகக் கொண்டது இப்படைப்பு.
நாஞ்சில் நாடன் எழுதி சாகித்திய விருது பெற்ற "சூடிய பூ சூடற்க" சிறுகதைத் தொகுப்பு மலையாளம், ஆங்கில மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
To read: / முழுவதும் வாசிக்க
https://aroo.space/2022/03/05/இடமோ-வலமோ/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice: Saraswathi Thiagarajan
Kovai Anandan | Short story |"Gold Chain" |
கோவை ஆனந்தன் | சிறுகதை | "கோல்டு செயின்"
கவிஞர் கோவை ஆனந்தன்- ஒரு சிறு முன்னுரை
1979 ஆம் ஆண்டு விவசாய குடும்பத்தில் குமாரபாளையயத்தில் பிறந்து கோவைதொழிற்பயிற்சி நிலையத்தில் படிப்பை முடித்தார். இவர் கதைகள் கவிதைகள்எழுதி வருகிறார். 2003 ஆம் ஆண்டு இவரது கவிதையைப் படித்த அப்போதையஇந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்கள் இவரைப்பாராட்டி கவிஞர் என்ற அடைமொழி கொடுத்தார். பாக்கியா, சிறுவாணி மெயில், தன்னம்பிக்கை மாத இதழ் குடும்ப நாவல்,கொலுசு போன்ற அச்சுஇதழ்களிலும்இன்னும் பல சிற்றிதழ்களிலும் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன, பொள்ளாச்சிஇலக்கிய வட்டத்தின் வெளியீடாக இவரது முதல் கவிதை தொகுப்பு வெளிவரஉள்ளது.
To read: /முழுவதும் வாசிக்க
https://padhaakai.com/2022/12/11/gold-chain/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
எழுத்தாளர் | கோ. துக்காராம் |சிறுகதை |"எழுத்தோவியம்" |
G. Thukaram | short story| Ezuthoviyam
சொல்வனம்: எழுத்தாளர் கோ. துக்காராமின் கதை/ Solvanam: G. Thukaram's Short Story Ezuthoviyam
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2009/12/10/எழுத்தோவியம்/
ஒலி வடிவம்c:
சரஸ்வதி தியாகராஜன்/Voicec: Saraswathi Thiagarajan
எழுத்தாளர் |உஷாதீபன் |சிறுகதை| "என் மக்கள்" |பதாகை | Writer | UshaDeepan
|short Story | "En MakkaL"
எழுத்தாளர் உஷாதீபன்- ஆசிரியர் குறிப்பு
இவர் இயற்பெயர் கி.வெங்கட்ரமணி. வத்தலக்குண்டுவில் பிறந்த இவர் உதவிக் கணக்கு அலுவலகராகப் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.
1981-ல் எழுத ஆரம்பித்து விகடன், தாய், குங்குமம், கல்கி, சாவி, இதயம் பேசுகிறது, கலைமகள், சதங்கை, தினமணி கதிர், செம்மலர், உயிர்எழுத்து, தாமரை, வார்த்தை என்று வார, மாத இதழ்களிலும், இணைய தள இதழ்களான திண்ணை, பதாகை, உயிரோசை, கீற்று, பதிவுகள், அதிகாலை, ஆகிய இதழ்களிலும் எழுத்து தொடர்கிறது.
முதல் சிறுகதைத் தொகுப்பு 'உள்ளே வெளியே' இதைத் தொடர்ந்து பார்வைகள், நேசம், வாழ்க்கை ஒரு ஜீவநதி, நினைவுத் தடங்கள், சில நெருடல்கள், திரை விலகல், வெள்ளை நிறத்தொரு பூனை, தனித்திருப்பவனின் அறை போன்ற பல இவரது குறிப்பிடத்தகுந்த சிறுகதைத் தொகுதிகளாகும்.
புயலுக்குப் பின்னே அமைதி, மழைக்கால மேகங்கள் போன்றவை இவரது குறுநாவல்களாகும்.
சென்னை இலக்கியச் சிந்தனை அமைப்பின் சிறந்த மாதச் சிறுகதைப் பரிசு, கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டிப் பரிசு, அமுத சுரபி பொன் விழா சிறுகதைப் போட்டிப் பரிசு, குங்குமம் நட்சத்திரச் சிறுகதை, இளையதலைமுறைச் சிறுகதைப் பரிசு, தினமணி கதிர் நெய்வேலி புத்தகத் திருவிழா சிறுகதைப் போட்டிப் பரிசு எனப் பல பரிசுகள் பெற்றுள்ளார்.
To read: /முழுவதும் வாசிக்க/
https://padhaakai.com/2022/11/15/my-people/
ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice o: Saraswathi Thiagarajan
இரா.முருகன்| சைக்கிள் முனி | சிறுகதை | Era Murugan | Cycle Muni | Short story
எழுத்தாளர் இரா முருகன்-
சிறு முன்னுரை
இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார்.
நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார்.
இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார்
ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.
To read: / முழுவதும் வாசிக்க/
https://www.sirukathaigal.com/குடும்பம்/சைக்கிள்-முனி/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
K.J. Ashokkumar | Short story |"Bus Stand"/ கே.ஜே.அசோக்குமார் | சிறுகதை "பஸ் ஸ்டாண்ட்"
எழுத்தாளர் கே.ஜே. அசோக்குமார்- ஒரு சிறு முன்னுரை
தஞ்சாவூரில் வசித்துவரும் எழுத்தாளர் கே.ஜே. அசோக்குமார் கடந்த
பன்னிரண்டு வருடங்களுக்கும் மேலாக சிறுகதைகள் எழுதிவருகிறார்
தொடர்ந்து தமிழ் இலக்கிய சூழலில் நாவல்கள், கட்டுரைகள், நூல்கள்
என்று பயணிப்பதில் ஆர்வம் உள்ளவர். இவருடைய கதைகள், பல இணைய இதழ்களில் வெளிவந்திருக்கின்றன.
"சாமத்தில் முனகும் கதவு" என்ற சிறுகதைத் தொகுப்பு ஏற்கனவே
வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் "குதிரை மரம் & பிறகதைகள்" என்ற
இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது.
To read: /முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2010/05/27/பஸ்-ஸ்டாண்ட்/
ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
From the publisher's feed