
Sign up to save your podcasts
Or


பாரதியார். | சிறுகதை | "ஆறிலொரு பங்கு" |பாகம்-2 |Bharatiyar| story |"ARiloru Pangu"
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2012/12/22/ஆறில்-ஒரு-பங்கு/
ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
பாரதியார். | சிறுகதை | "ஆறிலொரு பங்கு" |Bharatiyar| story |"ARiloru Pangu"
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2012/12/22/ஆறில்-ஒரு-பங்கு/
ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Shyamala Gopu | Short story |"Bantham" | ஷ்யாமளா கோபு | சிறுகதை | "பந்தம்"
எழுத்தாளர் G. சியாமளா கோபு- ஒரு சிறு முன்னுரை
நாற்பதாண்டு சமூக செவிலியராக பணியாற்றிய உயர் அனுபவம் சிறந்த சமூக செவிலியருக்கான "National Florence nightingale award 2016"- ஐ மேதகு ஜனாதிபதியின் கையால் பெற்றுத் தந்தது.
இவருக்கு மனங்களைப் படிப்பது பிடிக்கும். மனிதர்களை நேசிப்பது மிகவும் படிக்கும். படிப்பது இவருக்கு எல்லாம். எழுதுவது இவரின் இயல்பு.
இவரது மோகமே மௌனமாய்,
அழகே அருகில் வரவேண்டும், உயிரில் ததும்பும் உறவுகள், அந்த வானம் எந்தன் வசம்,
காற்றோடு காற்றாக, கை வளைவில் என் கனவு, வைகறையின் தாமரை, இனி எல்லாம் நீயாக என்ற புத்தகங்கள் வெளிவந்துள்ளன.
To read: /முழுவதும் வாசிக்க
https://padhaakai.com/2022/12/11/bond/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
தி. இரா. மீனா | சிறுகதை| லலிதாம்பிகா |
அவள், அழிவற்றவள் | மலையாள மூலம்: லலிதாம்பிகா அந்தர்ஜனம்
நன்றி : On The Far Side Of Memory –Short Stories Oxford University Press 2017
மலையாள மூலம்: லலிதாம்பிகா அந்தர்ஜனம்
ஆங்கில மொழிபெயர்ப்பு: ஜே.தேவிகா
தமிழில் : எழுத்தாளர் தி.இரா.மீனாவின் அவள், அழிவற்றவள்
எழுத்தாளர் தி.இரா.மீனா - முன்னுரை மதுரை தியாகராசர் கல்லூரியில் ’ வட்டார நாவல்கள் ’ குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்று பெங்களூர் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியாக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். பதாகை ,சொல்வனம், குவிகம் ,அம்ருதா முதலிய இதழ்களில் இந்திய மொழிக் கவிதைகள் மற்றும் சிறுகதைகள் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2021/04/10/அவள்-அழிவற்றவள்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
"அதிகாரம்"| Writer | UshaDeepan |short Story | "Athikaram"
எழுத்தாளர் |உஷாதீபன் |சிறுகதை| "அதிகாரம்" |பதாகை | Writer | UshaDeepan
|short Story | "Athikaram"
எழுத்தாளர் உஷாதீபன்- ஆசிரியர் குறிப்பு
இவர் இயற்பெயர் கி.வெங்கட்ரமணி. வத்தலக்குண்டுவில் பிறந்த இவர் உதவிக் கணக்கு அலுவலகராகப் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.
1981-ல் எழுத ஆரம்பித்து விகடன், தாய், குங்குமம், கல்கி, சாவி, இதயம் பேசுகிறது, கலைமகள், சதங்கை, தினமணி கதிர், செம்மலர், உயிர்எழுத்து, தாமரை, வார்த்தை என்று வார, மாத இதழ்களிலும், இணைய தள இதழ்களான திண்ணை, பதாகை, உயிரோசை, கீற்று, பதிவுகள், அதிகாலை, ஆகிய இதழ்களிலும் எழுத்து தொடர்கிறது.
முதல் சிறுகதைத் தொகுப்பு 'உள்ளே வெளியே' இதைத் தொடர்ந்து பார்வைகள், நேசம், வாழ்க்கை ஒரு ஜீவநதி, நினைவுத் தடங்கள், சில நெருடல்கள், திரை விலகல், வெள்ளை நிறத்தொரு பூனை, தனித்திருப்பவனின் அறை போன்ற பல இவரது குறிப்பிடத்தகுந்த சிறுகதைத் தொகுதிகளாகும்.
புயலுக்குப் பின்னே அமைதி, மழைக்கால மேகங்கள் போன்றவை இவரது குறுநாவல்களாகும்.
சென்னை இலக்கியச் சிந்தனை அமைப்பின் சிறந்த மாதச் சிறுகதைப் பரிசு, கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டிப் பரிசு, அமுத சுரபி பொன் விழா சிறுகதைப் போட்டிப் பரிசு, குங்குமம் நட்சத்திரச் சிறுகதை, இளையதலைமுறைச் சிறுகதைப் பரிசு, தினமணி கதிர் நெய்வேலி புத்தகத் திருவிழா சிறுகதைப் போட்டிப் பரிசு எனப் பல பரிசுகள் பெற்றுள்ளார்.
To read: /முழுவதும் வாசிக்க/
https://padhaakai.com/2023/01/15/power/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
Solvanam: Writer Amarnath's "Athanalthan" short story/ சொல்வனம்:
எழுத்தாளர் அமர்நாத்தின் சிறுகதை "அதனால்தான்.."
எழுத்தாளர் அமர்நாத்- ஒரு சிறு முன்னுரை அடிப்படையில் விஞ்ஞானியாகப் பணியாற்றும் அமெரிக்கா வாழ் தமிழ் எழுத்தாளர் அமர்நாத்தின் கதைகள் மனிதர்கள் மேல் கொண்ட பேரன்பின் வெளிப்பாடுகளாகவே உள்ளன. அமர்நாத்தின் முதல் சிறுகதை ‘திண்ணை’ இணைய இதழில் வெளிவந்தது. அதன் பின்பு இரு சிறுகதைத் தொகுப்புகளையும் ஒரு குறுநாவலையும் திடீரென்று, உறுதுணை தேடுமின், பரிமளவல்லி, கோகிலா இப்போது இங்கே இல்லை, நிலம் நீர் காற்று, மாயபிம்பம்,யாருக்கோ கட்டிய வீடு, காதம்பரியம், காயகல்பம் ஆகிய நாவல்களையும் இதுவரை எழுதியுள்ளார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2010/01/31/அதனால்தான்/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
ஆதம்பூர்க்காரர்கள் | இரா.முருகன்| AthambUrkararkaLl | Era Murugan
சிறு முன்னுரை இரா. முருகன் 1953 ஆகஸ்ட் 28 தமிழ்நாடு, சிவகங்கையில் பிறந்தார். நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், பதினோரு நாவல்கள், ஒரு கவிதைத் தொகுப்பு, தகவல் தொழில்நுட்பம் குறித்த இரண்டு புத்தகங்கள், இரண்டு தொகுப்பு நூல்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகள் எழுதி உள்ளார். கதா விருது, இலக்கியச்சிந்தனை விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, லில்லி தேவசிகாமணி விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளார். இவர் திரைப்படங்களுக்கு வசனம் எழுதியதுடன் "இரட்டை தெரு" என்ற குறும் படத்தில் நடித்தும் இருக்கிறார் ஐபிஎல் கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான அஷ்வின் முருகனின் தந்தையும் இவரே.
To read: / முழுவதும் வாசிக்க/
https://old.thinnai.com/?p=10311069
( ஆதம்பூர்க்காரர்கள் தொகுதி – 1992 – ஞானச்சேரி வெளியீடு)
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
எழுத்தாளர் | அசோகமித்திரன் | சிறுகதை | "இரண்டு விரல் தட்டச்சு" | Ashokamitran |Short Story | IraNdu Viral Thattachu
எழுத்தாளர் அசோகமித்திரன்- ஒரு சிறுமுன்னுரை
தியாகராஜன் என்ற இயற்பெயர் கொண்ட அசோகமித்திரன் தன் தந்தையின் மறைவிற்குப் பிறகு சென்னைக்குக் குடியேறினார் . இவருடைய எழுத்து எளிமையும் மெல்லிய நகைச்சுவையும் கொண்டது.
அமெரிக்க இலக்கியங்களைத் தமிழில் அறிமுகம் செய்த தனிப்பெருமை
இவருக்குரியது.
1996-இல் "அப்பாவின் சிநேகிதர்" சிறுகதை தொகுப்புக்காகச் சாகித்ய அகாதமி விருது பெற்றவர்.
9 நாவல்கள், 16 சிறுகதைத் தொகுப்புகள், 2 குறுநாவல் தொகுப்புகள் 14 கட்டுரைத் தொகுப்புகள் 3 மொழிபெயர்ப்பு நூல்களுடன் ஆங்கிலத்திலும் ஒரு நூல் எழுதியுள்ளார்.
தமது 86 ஆம் அகவையில் இவர் இறந்தார்.
To read: /முழுவதும் வாசிக்க
https://solvanam.com/2014/06/15/இரண்டு-விரல்-தட்டச்சு/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
"அபூர்வ ராகம்" | சிறுகதை | லா.ச. ராமாமிருதம் | "Apoorva Ragam" | Short Story | LaaSaRamamirtham
எழுத்தாளர் லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம்- ஒரு சிறு முன்னுரை
லா.ச.ரா என்று அழைக்கப்பட்ட லா. ச. ராமாமிர்தம் லால்குடியில் பிறந்தார். 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 நாவல்கள், 2 வாழ்க்கை வரலாற்று நூல்கள்உள்பட எண்ணற்ற நூல்களை லா.ச.ரா எழுதியுள்ளார்.
லா.ச.ரா.வின் முதல் கதை 18-வது வயதில் வெளியானது. இவருடைய "பாற்கடல்" என்ற படைப்பைத் தலையாயதாகக் கூறுவார்கள்.
இவரது சுயசரிதை நூல் “ சிந்தாநதி” இவருக்கு 1987ல்
சாகித்திய அகாதமி பெற்றுத் தந்தது.
லா.ச.ரா தமது 91-வது வயதில்,
சென்னையில் காலமானார்.
To read: / முழுவதும் வாசிக்க
https://azhiyasudargal.blogspot.com/2013/04/blog-post_4.html?m=1
ஒலி வடிவம் : சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
எழுத்தாளர் | பிரபஞ்சன் | சிறுகதை | "அன்னை இட்ட தீ" | Prapanchan |Short Story | Annai Itta Thee
எழுத்தாளர் பிரபஞ்சன்- ஒரு சிறு முன்னுரை
1945 ஆம் வருடம் பிறந்த ஒரு தமிழ் எழுத்தாளர் மற்றும் விமர்சகர். இவர் 1995 ஆம் ஆண்டு, "வானம் வசப்படும்" புதினத்திற்காக தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர். ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கி குமுதம், ஆனந்த விகடன் மற்றும் குங்குமம் ஆகிய வார இதழ்களில் பணிபுரிந்தார். இவர் நிறைய சிறுகதைகள் மற்றும் நாவல்களும் எழுதி பல பரிசுகளும் விருதுகளும் பெற்றவர்.
எழுத்தாளர் பிரபஞ்சனின் சிறுகதை ""அன்னை இட்ட தீ""
To read: / முழுவதும் வாசிக்க
https://www.sirukathaigal.com/சிறப்பு-கதை/அன்னை-இட்ட-தீ/
ஒலி வடிவம் :
சரஸ்வதி தியாகராஜன்/Voice : Saraswathi Thiagarajan
From the publisher's feed