பூர்வீக குடி மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களின் பிரதி நிதிகள், ஆஸ்திரேலிய சின்னங்களில் ஒன்றான உலுறு மலைக்கு அருகில் நடந்த தேசிய அரசியலமைப்பு மாநாட்டை 2017ஆம் ஆண்டு மே மாதத்தில் நடத்தினார்கள். பூர்வீக குடி மக்களின் தலைமையில் இரண்டு வருடங்களாக, மொத்தம் 13 கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டிருந்தன. அந்த கலந்துரையாடல்களின் முடிவில் நடந்த இந்த மாநாட்டில் 250 பூர்வீக குடி மக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அந்த மாநாட்டில், ‘இதயத்திலிருந்து வெளியாகும் உலுறு அறிக்கை’ என்ற தலைப்பிலான அறிக்கையை ஏற்றுக் கொண்டார்கள். நாட்டின் அரசியலமைப்பில் பூர்வீக குடி மக்களை அங்கீகரிப்பதற்கான ஒரு வரைபடம் இந்த அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது. மூன்று முனைகளில் சீர்திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன - குரல், ஒப்பந்தம் மற்றும் உண்மை. தமது இறையாண்மையை விட்டுக் கொடுக்காமல், நல்லிணக்கத்தை நோக்கி முன்னேற உண்மை, நீதி மற்றும் சுயநிர்ணயத்தின் அடிப்படையில் ஆஸ்திரேலிய தேசத்திற்கும் பூர்வீக குடி மக்களுக்கும் இடையே நல்லுறவை ஏற்படுத்த இந்த அறிக்கை முயல்கிறது. இசை: Frank Yamma.