* லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வரும் 95-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் டைரக்டர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியான'ஆர்ஆர்ஆர்' திரைப்படத்தின் ''நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் விருதை தட்டி சென்றது.
* லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்று வரும் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் யானைகளை பராமரிக்கும் நீலகிரி மாவட்டம் முதுமலை தம்பதி குறித்த ஆவண குறும்படமான 'தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்' (The Elephant Whisperers) ஆவண குறுப்படம் ஆஸ்கர் விருதை இன்று வென்றுள்ளது. தாயை பிரிந்து தவித்த 2 குட்டி யானைகளை பராமரிக்கும் நீலகிரியின் முதுமலையை சேர்ந்த பொம்மன், பொம்மி தம்பதி குறித்த ஆவண குறும்படமான 'தி எலிபெண்ட் விஸ்பர்ஸ்' படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது.
* அதானி கடன் விவரங்கள் தொடர்பாக மக்களவையில் உறுப்பினர் தீபக் பாய்ஜ் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் , ஆர்பிஐ சட்டத்தின்படி எந்தவொரு நிறுவனத்தின் கடன் விவரங்களையும் வழங்க முடியாது. எனவே, அதானி நிறுவன கடன் விவரங்களை வெளியிட முடியாது என்று தெரிவித்துள்ளார்.
* ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், பா.ஜ.க, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், 2 இடதுசாரிக் கட்சிகள், தேசிய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு 2021-2022ம் ஆண்டில் அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து 2,172 கோடி ரூபாய் வருமானம் கிடைத்திருப்பதாகவும், இது மொத்த வருமானத்தில் 66 சதவீதம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* மதுரை விமான நிலையத்தில் அ,ம,மு.க நிர்வாகி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு
* நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கிய முதல் நாளிலேயே முடங்கியது: இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு.
Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed