சினிமாக்களிலும் சிக்கனமுண்டு,
சினிமாத்துறையில் சிக்கனமும்
சிங்கத்தைக்காட்ட காட்டுக்குபோகத்
தேவையில்லை, கம்ப்யூட்டரேபோதும்!
தங்கநகைகள் வாங்கத்தேவையில்லை,
காஸ்ட்லி ஆடைகள்தேவையில்லை.
ஆடைகளிலும் ஆரவாரிக்கிறது.
கோட்டும்சூட்டும் பட்டாடைகளும்
பகட்டுத்துணிகளும் தேவையில்லை,
கிழிந்தடவுசரும் மிஞ்சியஎஞ்சிய
ஆடியன்ஸ்கூட்ட ஆள்தேடதேவையில்லை,
ஆன்லைன் டெலிகாஸ்டேபோதும்!
வசனங்கள் அதிகம்தேவையில்லை,
வசீகரமான காட்சியமைப்பிற்கு
வார்த்தைச்சிக்கனம் வைக்கப்படுகிறது!
சிரிப்புபஞ்சத்தை பாதுகாக்க
அயல்நாட்டு ஷூட்டிங்குப்பதில்
நாட்டிற்கு தலைவனாகதலைவியாக
தலைகெட்டு செலவுசெய்யத் தேவையில்லை!