இரவுகடந்தால் தேவர்கள் தேவலோகத்தில்தான்
இருக்கவேண்டும் - இதுநியதி
அந்நேரம் அவர்களின் கட்டாயகாலம்!
கையூட்டு வாங்கி முடிந்தால்
கையேந்தாப் பிச்சைக்காரர்களாக தங்கள்
பணத்தை எண்ணிக் கொண்டிருப்பார்கள்
அந்நேரம் ஏழைகளின் துயரகாலம்,
வாங்கியவர்களுக்கோ வசந்தகாலம்.
அதுவிண்ணில் முழுநிலா பவனிவரும்
அற்பக் கதிர்மறையும் காலம்!
தாக்கிற்று மின்னல் ஒளிக்கீற்று!
வெள்ளைப் புறாவாக இறக்கையுடன்
வெண்ணீராடையுடன் - இவர்களை
அவர்களை….. எங்கோ….. கண்டுள்ளேன்!
ஆம்! அவர்கள் இரக்கமுள்ளஇதயம்