உயிரிலிருந்து உயிர்மெய்வரை
ஆள்பவர்களைக் குழப்பியது கொரோனா!
இயலாமையைத் தந்தது கொரோனா!
ஈட்டிய செல்வத்தையும் வீணாக்கியது!
ஊமைகளாக்கி நம்வாயையும் மூடவைத்தது!
எட்டிநின்றே பழகவைத்தது கொரோனா,
ஏழைகளின் வயிற்றையும் காயவிட்டிருக்கிறது!
ஐந்தறிவு ஜீவன்களெல்லாம் வெளியே,
ஒத்தையாய் மனிதன் மட்டும் உள்ளே!
ஓசையற்று ஓடிஒதுங்க வைத்ததும்,
ஒளதாரியத்தை தந்ததும் கொரோனாதான்!
கண்முன்னே நுரையீரலைத் தாக்கி
காட்டுத் தீப்போல உயிர்களை,
கிடுக்கிப்போட்டு எடுத்துச் சென்றது.
கீற்றைக் கிழிப்பதுபோல் உயிர்அழித்ததால்
குழந்தைகள்பல அநாதைகள் அமெரிக்காவில்!
கூடியஓலங்கள் அடங்கியது சைனாவில்!
கெஞ்சும் பசிக்குரல்களின் சத்தம்
கைகழுவும் அரசியல் அமைப்புகள்!
கொட்டிக் கிடந்த அன்பையும்,