நாவசைந்த காலத்தில் தமிழைத்தந்து
நடையசைந்த காலத்தில் வீரம்தந்து
பாவசைந்த காலத்தில் பக்திதந்து
படையசைந்த காலத்தில் வெற்றிதந்து
காவசைந்த காலத்தில் கானம்தந்து
கண்ணசைந்த காலத்தில் கருணைதந்து
கோவசைந்த காலத்தில் காட்சிதந்து
குடியசைந்த காலத்தில் காக்கும்தேவன்,
வையத்தைப் புரக்கவென வந்தநங்கை
வாழ்வில் ஐயத்துகிடமின்றி தூயவளாக,
ஆறோடும் இப்பூமியில் ஜனித்தஜான்சிக்கு
ஆறாக கண்களிலே வேள்வித்தீபெருக,
ஜயப்பறைகள் சாற்றுவிப்பதற்கு பதிலாக
ஐயப் பறைகள் சாற்றுவித்து,
களிப்புடனே வாழ்ந்த பெண்ணைக்
பண்டை காலத்து பைத்தியங்களை
பண்பாடின்றி அனுப்பி வைத்து,
களிப்பான இந்தப் பறவையின்,
இன்பமான இவ்வீரப் பறவையின்
இனிமையான வாழ்வை கலகலக்கச்செய்து
காட்டு மரங்களினிடையே எழும்பும்
களிப்புமிகு நல்லிசை யினைமாற்றி,
நீலப் பெருங்கடல் எந்நேரமுமே
நீட்டி முழக்கும் இனியஇசையை