நசிந்து கிடக்கும் இதயத்தை
கசிந்துவரும் கண்ணீரால் வருடுபவன்கோழை!
துடிக்கும் மனதையே துடுப்பாக்கி
மாலுமியாய் செல்பவன் சுத்தவீரன்!
முயல்பவன் கடமைதவற விட்டகோழை!
தண்டிக்காமல் விட்டதை இடித்து
துடுக்காய் எடுத்துரைப்பவன் வீரன்!
சதிகாரக் கும்பலோடு சேர்ந்து
சதிசெய்பவன் என்றும் கோழை!
சரித்திரத்தில் இடம்பெற சங்கடங்களோடு
சரவெடியாய் போராடும் போராளிவீரன்!
வெற்றிக்கு காரணங்கள் கதைக்க
இயலாது தெளிந்தவன் சுத்தவீரன்!
தோல்விக்கு அழகாக காரணங்களைத்
தோண்டி எடுத்துச் சொல்பவன்கோழை!
வெற்றிக்கும் தோல்விக்கும் சரியான
காரணம் கதைப்பவன் சராசரிமனிதன்!
உயர்வுக்கும் தாழ்வுக்கும் காரணமின்றி
விடுகதையாய் வாழ்பவன் சரியானமனிதனில்லை!
விட்டுப் போகிறவன் மனிதனேயல்ல!
கோழையாகவும் வீரனாகவும் இருப்பதைவிட
மனிதனாக இருப்பதே மகத்தானது!