https://youtube.com/playlist?list=PLwtamDjpMVS4tiGRJ0h_8HNfiV0Suazkq
பாடியவர்: இரும்பிடர்த் தலையார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி.
திணை: பாடாண்.
துறை : செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம்.
சிறப்பு : இரும்பிடத் தலையாரைப் பற்றிய செய்தி.
உவவுமதி யுருவி னோங்கல் வெண்குடை
நிலவுக்கடல் வரைப்பின் மண்ணக நிழற்ற
ஏம முரச மிழுமென முழங்க
நேமி யுய்த்த நேஎ நெஞ்சிற்
றவிரா வீகைக் கவுரியர் மருக 5
செயிர்தீர் கற்பிற் சேயிழை கணவ
பொன்னோடைப் புகரணிநுதற்
றுன்னருந்திறற் கமழ்கடாஅத்
தெயிறுபடை யாக வெயிற்கத விடாஅக்
கயிறுபிணிக் கொண்ட கவிழ்மணி மருங்கிற் 10
பெருங்கை யானை யிரும்பிடர்த் தலையிருந்து
மருந்தில் கூற்றத் தருந்தொழில் சாயாக்
கருங்கை யொள்வாட் பெரும்பெயர் வழுதி
நிலம்பெயரினு நின்சொற்பெயரல்
பொலங்கழற்காற் புலர்சாந்தின் 15
விலங்ககன்ற வியன்மார்ப
ஊரில்ல வுயவரிய
நீரில்ல நீளிடைய
பார்வ லிருக்கைக் கவின்கண் ணோக்கிற்
செந்தொடை பிழையா வன்க ணாடவர் 20
அம்புவிட வீழ்ந்தோர் வம்பப் பதுக்கைத்
திருந்துசிறை வளைவாய்ப் பருந்திருந் துயவும்
உன்ன மரத்த துன்னருங் கவலை
நின்னசை வேட்கையி னிரவலர் வருவரது
முன்ன முகத்தி னுணர்ந்தவர் 25
இன்மை தீர்த்தல் வன்மை யானே.
(உயங்கு – வருந்து suffer be in pain or distress)
(செந்தொடை - Aim in shooting; அம்பு முதலியவற்றை எய்யுங் குறி)
கருத்து : பூமியே பிளந்தாலும் உன் ஆணையாகிய சொல் பிறழாது நீ இருக்க வேண்டும்!-இதுதான் தமிழன்!
#Purananooru #tamilLiterature #SangamPeriod #tamil #புறநானூறு #சங்கம் #தமிழ்