* கோவை சரக டிஐஜி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
* டிஐஜி தற்கொலை - சிபிஐ விசாரணை தேவை"
கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்
"டிஐஜி விஜயகுமாரின் தற்கொலை பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது" - தமிழக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
* சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானது. அதில் தலையிட முடியாது எனவும் . ராகுல்காந்தி மீது குறைந்தது 10 கிரிமனல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் குஜராத் ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
* மேகதாது அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தொடர்பாக கர்நாடக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
* திமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கு தொடர்பாக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி எழுதிய கடிதத்துக்கு ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
இதற்கு பதில் அளித்த ரகுபதி, "“முற்றிலும் உண்மைக்கு புறம்பான தகவல்களை எப்படி ஆளுநர் மாளிகையில் இருந்து கொடுக்கிறார்கள் என்பது ஆச்சரியம் அளிக்கிறது" என்று தெரிவித்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் மீது வழக்குத் தொடர அனுமதி கோரி ஆளுநர் மாளிகைக்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியிருந்தது. அதை பெற்றுக் கொண்ட ஆளுநர் மாளிகை அதிகாரிகள், அதற்கு வழங்கிய ஒப்புகை சீட்டு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
* மகளிருக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்துக்கான பயனாளிகளை சிறப்பு முகாம்களின் மூலம் தோ்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. செய்திருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
* ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- பாஜக தலைவர் அண்ணாமலை எங்கள் மறைந்த தலைவரை விமர்சித்தார். நாங்கள் கடுமையான கண்டனத்தை தெரிவித்தோம். அண்ணாமலை தவறை திருத்திக் கொண்டுள்ளார்; இனி அதிமுக பற்றி விமர்சனம் செய்ய மாட்டார்" என்று கூறினார்.
Credits : Script & Hosts : Srinivasan & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed