
Sign up to save your podcasts
Or


ஓதுவது வேதமே ஓத வேணும்
உலகத்தில் வேதமில்லாது ஒன்றும் இல்லை
மாதுமக்கள் என்றுதாம் எண்ணி எண்ணி
மாள்வதற்கும் பிறப்பதற்கும் வைத்தான் ஈசன்
தீதுவென்ற தீயினிலே விழுந்தாய் ஆனால்
செடம்விழுந்து போகுமடா ஞானம் ஏது
தாதுவென்ற சடமிருந்தால் ஞானம் வாய்க்குஞ்
சகலகலைத் தியானமெல்லாந் தருகும் பாரே.
அகத்தியர் பாடல்
ஆச்சிந்த உலகத்தில் இருக்கும் போது
அசலருடன் கூடி ஆணவம்பேசாதே
நாச்சிந்த உலகத்தில் நடக்கலாகா
நடந்தாலும் மவுனத்தே தூங்கு தூங்கு
காச்சந்த மவுனத்தை விட்டாயானால்
கருவிகளான் கொல்லுமடா தியானம் போச்சு
மூச்சென்ற யோக முதல் ஞானம் போச்சு
முறையோடே இருக்கவென்றால் குகையைக்காரே
அகத்தியர் பாடல்
ஞானியென்று ஒருகுலையில் காய்த்ததோ சொல்
நரசென்மங் கோடியிலே ஒருவனப்பா
யோனிவாய்ப் பட்டசடம் ஆகையாலே
உத்தமனே காயசித்தி யாக வேணும்
ஊணென்ற தேகமது கற்ப தேகம்
உத்தமனே கயிலாயத் தேகமானால்
மானிலத்தின் மனிதனல்ல தேவனாச்சு
மைந்தனே அற்பமடா மனிதர் வாழ்வே.
அகத்தியர் பாடல்
சங்கமதிற் பரப்பிர்ம மொன்றைப்போற்றி
சகலபயந் தீர்த்தநன்மை தனையே போற்றி
துங்கமுறு லிங்கமென்றும் பூசைசெய்து
சுனைகெட்ட மாடப்பா சாம்பற்பூசி
எங்கினும் போய் சிவசிவா வென்றலைந்தே
ஏங்கியெரி நரகமதில் விழுவாரப்பா
பொங்குதிரைக் கடல் மூழ்கித் தீட்சைபெற்றால்
புகழ்கிரியாங் கைலாசம் போகலாமே
அகத்தியர் பாடல்
பாரப்பா நால்வேதம் நாலும் பாரு பற்றாசை வைப்பதற்கோ
பிணையோ கோடி
வீரப்பா ஒன்றொன்றுக்கு ஒன்றை மாறி வீணிலே
யவர்பிழைக்கச் செய்த மார்க்கம்
தேரப்பா தெருத்தெருவே புலம்பு வார்கள் தெய்வநிலை
ஒருவருமே காணார் காணார்
ஆரப்பா நிலைநிற்கப் போறா ரையோ ஆச்சரியங்
கோடியிலே யொருவன் தானே
அகத்தியர் பாடல்
காணாரே தீபவொளி யேதென்றாக்கால்
காவலனே புலத்தியனே கருவுள்ளானே
தோணாத பொருளென்று எண்ணவேண்டாம்
தொகுப்பான வரைபாடு நண்ணலொப்பாய்
மாணாத சடலமதில் நினைத்ததெல்லாம்
மார்க்கமுடன் கண்டறிந்தா லதுவேசோதி
வீணான பாதைவழி நடந்தோர்கோடி
வீண்துறையாய் போதநிலை யலைந்தார்கானே
அகத்தியர் பாடல்
போற்றிநின்ற சின்மயத்தைப் புகலக்கேளு
புகழ்பெரிய பிருதிவி மண்நவ்வெழுத்தாம்
மாற்றியதோர் அப்பெழுத்து நீர்தான் மவ்வாம்
மைந்தனே சிவ்வெழுத்து தேய்வுதீயாம்
கோற்றிநின்ற வவ்வெழுத்து வாயுகறுப்பாகும்
கொண்டவெளி அவ்தெழுத்தே பஞ்சவுருவாகி
சாற்றறியாத் தூல உடல் தன்னிலாகித்
தன்னுச்சிவழி கடந்து ஓடும்பாரே.
அகத்தியர் பாடல்
ஏர்த்திடவே அங்சிவய நமவென் றாக்கால்
இயல்பாகத் தேகநோய் தீருங்காணே
காணப்பா வங்சிவ நமவென் றாக்கால்
கடுகவே யோக சித்தி காணலாகும்
பூணப்பா அங்சிவய நமவென் றாலோ
பொன்றாது தேகமப்பா ஆயுள் விர்த்தி
ஊனப்பா ஓம் அங்சி வாய மென்றால்
ஒழியாத பூதங்களோடும் பாரு
அகத்தியர் பாடல்
ஏர்த்திடவே அங்சிவய நமவென் றாக்கால்
இயல்பாகத் தேகநோய் தீருங்காணே
காணப்பா வங்சிவ நமவென் றாக்கால்
கடுகவே யோக சித்தி காணலாகும்
பூணப்பா அங்சிவய நமவென் றாலோ
பொன்றாது தேகமப்பா ஆயுள் விர்த்தி
ஊனப்பா ஓம் அங்சி வாய மென்றால்
ஒழியாத பூதங்களோடும் பாரு
அகத்தியர் பாடல்
சிவசிவா கேசரியைத் தினமும் நோக்கே
நோக்குறுமைப் பசிமுதலாய் மூன்று மாதம்
நுண்மையுட னுருக்கினத்துக் கால மாகும்
வாக்குறுதை முதலாக மூன்று மாதம்
மகத்தான செயநீரின் காலமாகும்
தாக்குறுசித் திரைமுதலாய் மூன்று மாதம்
சங்கையுடன் குருமுடிக்குங் கால மாகும்
தூக்குறுநல் லாடி முதல் மூன்று மாதம்
சுத்தமுடன் திராவகசெந்தூரஞ் செய்யே.
அகத்தியர் பாடல்
From the publisher's feed

0 Listeners