Tamil Spiritual Talks

Tamil Spiritual Talks

By Bremma Sri Kundalini SiddharReligion & SpiritualitySpirituality
Download on the App Store

Tamil Spiritual Talks episodes

  • Theraiyar song ep 17

    பகத் தொழுக்கு மாதரசங் கரந்துடைப்ப மிவை தூட்

    பட நெருங்கோம், தீபமைந்தர் மர நிழலில் வசியோம்,

    சுகப்புணர்ச்சி யசனபசனத்தருணஞ் செய்வோம்.

    துஞ்சலுண விருமலஞ்சை யோக மழுக்காடை

    வகுப்பெருக்கிற் சிந்துகச மிவைமாலை விரும்போம்,

    விற்சலந்தெய் விதும்பிர் சற்குருவை விடமாட்டோம்

    நகச்சலமு முளைச் சலமுந் நெறிக்கும்மிட மணுகோம்,

    நமனார்க்கிங் கேதுகவை நாமிருக்க மிடத்தே.


    தேரையர் பாடல்

    3 min
  • Agathiyar song ep 16

    சென்றேனே நோயாளி பக்கல்சென்றேன்

    தெளிவாக தேரையர் பின்னேநிற்க

    வென்றிடவே தேரைதனை யெடுக்கும்போது

    வேகமுடன் ராமதேவர் செய்தவண்மை

    பையவே தாம்பாளந் தன்னிலப்பா

    நையவே தேரையது மூளைவிட்டு

    நலமுடனே சலந்தனிலே குதிக்கலாச்சே,

    பாலகனே தானெடுத்து காட்டினார்பார்



    செய்தபின்பு தேரைய னென்றநாமம்

    திக்கெல்லாம் கீர்த்தியுண்டாம் பிரகாசித்து

    கைதவமாய் தேரைய றென்றநாமம்

    காசினியில் குருவாக்கு தானுமாகி

    வெய்ய புகழ் தேரைய னானசித்து

    வெகுகோடி வித்தைகளை செய்தமாண்பர்

    பொய்யாத பண்டிதனா மூமையப்பா

    பொன்னுலக சித்தனென்று பேருண்டாச்சே


    ஆச்சப்பா தேரைய ரென்றசித்து

    அப்பனே தலைமுறையின் முறைபாடெல்லாம்

    பேச்சப்பா மடாதிபதி பதினாலப்பா

    பேருலகில் தலைமுறை வர்க்கந்தன்னில்

    மூச்சடங்கி போனதொரு குருக்கள்மாண்பர்

    மூதுலகில் சீடவர்க்க திருவடிதானப்பா

    கூச்சமில்லா மாண்பர்களோ வெழுபத்தொன்பர்

    குவலயத்தி லிருந்தார்கள் வுண்மைகேளே.


    அகத்தியர்

    4 min
  • Agathiyar song ep 15

    சங்கமாம் நாற்பத்தி யெட்டுமாண்பர்

    சதுருடனே சபைகூடி யிருந்தாரப்பா

    துங்கமெனும் திரணாக்கிய பாலனுக்கு

    தூய்தாக நெடுங்கால தலைநோக்காடு

    தங்கியே வெகுகோடி சித்தரப்பா

    தயவுடனே கோடிவகை மருந்துமீய்ந்தார்

    புங்கசித்து யெட்டுரிய புண்ணியோற்கும்

    புதுமையாந் தலைநோவுந் தீராதன்றே.


    தீராத நோயப்பா முனிவருக்கு

    தீர்க்கமுட னெந்தனையு மஞ்சலித்து

    கூடாத வார்த்தையது மிகவுங்கூறி

    குருபரனே யெந்தனையு மவிழ்தங்கேட்டார்

    தீராத வடியேனு மனதுவந்து

    தீர்க்கமுடன் தலைதனையே கீறிமைந்தா

    வீராக வாயுதத்தால் தேரைதம்மை

    விருப்பமுடன்தாமெடுக்க சென்றிட்டேனே.


    அகத்தியர் பாடல்

    3 min
  • Agathiyar song ep 14

    கேளப்பா புண்ணாக்கு சித்தருக்கு

    கேவலமாந் தொழில்முறைகள் நடாத்துங்காலம்

    ஆளப்பா திருவடியின் வர்க்கமப்பா

    அப்பனே மடாதிபதி நாற்பத்தெண்பர்

    நீளப்பா வவரவர்கள் பாதந்தொட்டு

    நிட்களங்க மானதொரு சீடரப்பா

    சூளப்பா வெண்பத்து நாலுபேர்கள்

    சுந்தரனே மாணாக்க ளுண்டாம்காணே.


    உண்டாமே மாணாக்கர் தன்னிலப்பா

    வுத்தமனே சமுசார வாழ்க்கையோடும்

    தெண்டமுட னஞ்சலிகள் மிகவேசெய்து

    தேற்றமுடன் பதிபாச நிலைல்நின்று

    அண்டர்முனி ராட்சதர்கள் ரிடிகள்தம்மால்

    அப்பனே யவர்பணிக்கு யேவலாகி

    சண்டமா றுதம்போல யேவுகொண்டு

    சட்டமுடன் சிலகால மிருந்திட்டாரே.


    அகத்தியர் பாடல்

    4 min
  • Theraiyar song ep 13

    ஆறு திங்கட் கொருதடவை வமனமருந் தயில்வோம்

    அடர் நான்கு மதிக்கொரு காற்பேதியுரை நுகர்வோம்

    தேறுமதி யொன்றரைக் கோர் தரநசியம் பெறுவோம்

    திங்களரைக் கிரண்டு தரஞ் சவள விருப்புறுவோம்

    வீறுசதுர் நாட்கொருகால் நெய் முழுக்கைத் தவிரோம்

    விழிகளுக்கஞ் சனமூன்று நாட்கொருகா லிடுவோம்.

    நாறுகந்தம் புட்பமிவை நடுநிசியின் முகரோம்

    நமனார்க்கிங் கேதுகவை நாமிருக்கு மிடத்தே.


    தேரையர் பாடல்

    5 min
  • Bhogar song ep 12

    அஞ்சானது ஏது என்று கேட்பாயானால்

    அப்பனே தங்கமது பிரிதிவாகும்

    துஞ்சல் என்ற இரும்பு அதுவும்

    வாயுவாகும்

    துப்புரவாய்ச் செம்பு அதுவும் தேய்வாகும்

    மிஞ்சவே காரீயம் அப்புவாகும்

    மிக்கான நாகம் அது ஆகாசந்தான்

    துஞ்சலென்ற லோகமது அஞ்சுங்கூடி

    துறையான பஞ்சபூதம் ஒடுக்கந்தானே


    போகர் பாடல்

    3 min
  • Theraiyar song ep 11

    கன்மத் தால் வந்தவினை தீராவிட்டால்

    காயமழிந்தே பிறக்குங் கன்மநோய் வருகும்

    சென்மத்தில் விந்துவிட்டுச் செனித்தவுடன் வருகும்

    சீக்கிரமாய் நிவர்த்தி செய்து தீட்சைசெய்வாய்

    பன்மத்தில் துன்மார்க்கப் பாவிகள் தானூலை

    பாராமற் பொருளறியார் பாழ்வினைக் கீடாவார்

    கன்மத்தை நிவர்த்தி செய்யக் கடுகக்கேளு

    கனத்த தயா நிதி கிடைத்தால் தருகரது நோயே.


    தேரையர் பாடல்

    4 min
  • Bhogar song ep 10

    தானான உலகமதை

    ஆண்டும் என்ன

    தாரணியில் கீர்த்தியது பெற்றும் என்ன

    கோனான கோவேந்தர் தன்னைப்போலே

    கொற்றவனே கிரீடமதைக் கொண்டும் என்ன

    தேனான மாளிகையும் கட்டி என்ன

    திகழான சமுசாரம் கொண்டும் என்ன

    பானான பாலகரை பெற்றும் என்ன

    பாலகனே ஞானம் என்ற பால்தான்வேண்டே


    போகர் பாடல்

    2 min
  • Chitramuthi Adigalar song ep 9

    இக்கலியுலகினிலே

    மக்களை பெறுவதிலும்

    மிக்க நல்விவேகமூட்டணும் - பெரியார்கட்டு தக்க மரியாதைகாட்டணும்.


    நாசிரெண்டி லொன்றைமூடி

    வாசியோகம் செய்து நாங்கள் காசிசென்றுவந்தோமென்பரே

    கபடநீறு பூசிவேடம் போடும்வம்பரே


    சித்ரமுத்து அடிகளார்

    3 min
  • Agathiyar song ep 8

    யோகமென்றால் சிவயோக முண்மையாச்சு

    ஒத்து நின்ற கிரிகையடா யோக வாழ்க்கை

    பாகமென்றா லிடப்பாகம் பெற்றாளாத்தாள்

    பதிய றிந்து நின்றவனே சிவயோகியப்பா

    ஆகமபு ராணமெல்லா மவனேயாச்சு

    ஆதியாய் நின்றசத்தி யவளுங்கூட

    ஆகமத்தைப் பேசிவைத்தா ரீசன் தானும்

    அப்படியே உலகமது நடந்தவாரே.


    அகத்தியர் பாடல்

    3 min

About Tamil Spiritual Talks

From the publisher's feed

We post ancient siddhargal songs and their correct explanation to help people evolve themselves and understand what real spirituality is all about

More shows like Tamil Spiritual Talks

Ramya duraiswamy | Tamil cover songs by Ramya Duraiswamy

Ramya duraiswamy | Tamil cover songs

0 Listeners