A song sung by D. John Rabindranath as an exhortation to all ministers of God. Listen and be blessed
ஊழியனே கிறிஸ்துவின் ஊழியனே
திறப்பில் நின்று கதறும் தேவ ஊழியனே -2
சத்தியம் புரட்டி சொல்லும் காரணம் என்னவோ?
1. நீதி நியாயத்தீர்ப்பை கண்டிக்கும் ஆவியைப்
பெற்றும் அழிவைக் குறித்து சொல்லாமல் போகும் காரணம் ஏன்?
காணிக்கை குறைந்து போய்விடுமோ
புகழ்ச்சி குறைந்து போய்விடுமோ
கூடும் கூட்டம் குறைந்திடுமா -2
காரணம் சொல் என் மகனே - ஊழியனே.............
2. அன்பு வாக்குத்தத்தம் சொன்னால் போதுமா
வரும் அழிவைக் குறித்து சொல்ல வேண்டாமோ-2
அற்புதம் மட்டும் முக்கியமா
பரலோகம் அழைக்க வேண்டாமா - ஊழியனே.............
3. எலியா எலிசா பவுலும் பேதுருவும் வந்து
ராஜாக்களை எதிர்த்து சொன்னது போல்
அநியாயக்காரரின் துரோகத்தை
அவனுக்கு சொல்லாமல் போவாயானால்
அவனின் இரத்தம் உன் தலைமேல்
அதை அறியாமல் போனது ஏன்? - ஊழியனே.............