தடுத்தாட்கொண்ட தயாளன் கட்டளையால், கெடிலம், பெண்ணை, கொள்ளிடம் கடந்து காவிரி பாயும் ஆரூர் செல்கிறார் நம்பி ஆரூரர். சுந்தரர், சம்பந்தர் பூமியிலே கால் வைக்க தயங்கி, எல்லையில் தங்கி, தில்லை அம்பல தரிசனதோடு , சீகாழி, மாயூரம் வழி ஆரூர் அடைகிறார். சிவனடியார் சூழ, தம்பிரான் தோழனாகி பிறவிப் பயன் பெறுகிறார் அண்ணல்- விடங்கன் கட்டளையால் மணக்கோலமும் தரிக்கிறார்.