பக்தி இலக்கியங்களில் மிக முக்கிய இடம் நாயன்மார்கள் வரலாற்றுக்கு உண்டு. அநபாய குலோத்துங்க சோழனின் வேண்டுகோளுகிறங்கி, மிகுந்த முயற்சிக்கு பிறகு சேக்கிழார் திருத்தொண்டர்களின் பெருவாழ்வை தொகுத்து, தில்லையில் ஒரு வருட காலம் அவற்றை நாள்தோறும் விரித்து பொருள் நயம் உரைத்து, பொது மக்களையும் சான்றோரையும் பக்தி பரவசத்தில் ஆழ்த்தியுள்ளார். அந்த நிகழ்வுகளின் சுருக்கமாக இப்பகுதி அமைந்துள்ளது. அறுபத்து மூவர் கதைகளை சாமான்யர்களிடம் கொண்டு சேர்க்கும் நல்ல நோக்கத்தில், பெரிய புராணத்தை, வசன நடையில் தொகுத்தளித்த பிரேமா பிரசுரத்தாருக்கு, தமிழ் கூறும் நல்லுலகு பெருங்கடன்பட்டுள்ளது. நமது வாழ்த்துக்களும் ஓங்கி ஒலிக்கட்டும்! ஓம் நமசிவாய!