* தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வுகளின் தொகுப்பினை செவித்திறன் பாதிக்கப்பட்டவர்கள் புரிந்து கொள்ளும் வகையில், சைகை மொழியில் 10 நிமிடங்கள் ஊடகங்களில் ஒளிபரப்பு செய்யும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
* 500 கோடி இழப்பீடு கேட்டு அண்ணாமலைக்கு ஆர்.எஸ்.பாரதி நோட்டீஸ்
* 500 கோடியே 1 ரூபாய் கேட்டு அண்ணாமலை ஆர்.எஸ்.பாரதிக்கு நோட்டீஸ்
* அண்ணாமலையைக் கலாய்த்த எடப்பாடி, ஜெயக்குமார், அதிமுக செய்தி தொடர்பாளர் பாபு முருகவேல்
* மாணவிகள் திருப்தி அடையாததால் விசாரணைக் குழுவை நீதிமன்றமே அமைக்கலாமா என்பது குறித்தும் கலாஷேத்ரா பதில் தர நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
* பல் பிடுங்கிய விவகாரம் தொடர்பாக வட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விசாரணை பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக காவல் துறையினருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது
* டெல்லி மதுபானக்கொள்கை ஊழல் வழக்கு: சிபிஐ முன் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜர். சுமார் 9 மணி நேரம் கெஜ்ரிவாலிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டது.
* பாஜகவில் இருந்து விலகிய கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ஜெகதீஷ் ஷெட்டர், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
* புல்வாமாவில் கடந்த 2019-ம் ஆண்டு 40 வீரர்களை பலி கொண்ட தாக்குதல் நடந்தபோது அந்த மாநில கவர்னராக இருந்த சத்யபால் மாலிக் சமீபத்தில் அளித்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வீரர்கள் பயணம் செய்ய விமானம் கேட்டதாகவும், ஆனால் மத்திய அரசு மறுத்ததாகவும் அவர் தெரிவித்தார். சாலை வழியாக பயணம் செய்ததால்தான் இந்த சம்பவம் அரங்கேறியதாகவும் அவர் கூறினார்.
* அமித்ஷா கலந்துகொண்ட கூட்டத்தில் வெயிலின் கொடுமை தாங்காமல் 11 பேர் உயிரிழந்துவிட்டனர்.
* உத்தரப் பிரதேசத்தில் பிரபல ரவுடியும் முன்னாள் எம்பியுமான ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரன் அஷ்ரப் அகமதுவை 3 பேர் கொண்ட கும்பல் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: Abimanyu| Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed