* பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கவனித்த நிதி, மனித வள மேலாண்மைத்துறை தங்கம் தென்னரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. * நாசரிடமிருந்து பறிக்கப்பட்ட பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்க்கு ஒதுக்கப்பட்டுள்ளது. * அமைச்சர் மனோ தங்கராஜ் கவனித்த தகவல் தொழில்நுட்பத்துறை பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. * தங்கம் தென்னரசுவிடம் இருந்த தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் சாமிநாதனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ● தங்கம் தென்னரசு - நிதி, மனிதவள மேம்பாடு ● டி.ஆர்.பி.ராஜா - தொழில்துறை ● சாமிநாதன் - தமிழ் வளர்ச்சி ● பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் - தகவல் தொழில்நுட்பம் ● மனோ தங்கராஜ் - பால்வளத்துறை
* பழனிவேல் தியாகராஜனை துறை மாற்றி இருப்பது, நிச்சயமாக அவர் பேசிய ஆடியோ தான் காரணமாக இருக்கும். முதல்-அமைச்சர் ஸ்டாலின் மகனும், மருமகனும் ரூ.30 ஆயிரம் கோடி ஒரே வருடத்தில் குவித்து வைத்திருப்பதாக தியாகராஜன் கூறிய அந்த ஆடியோ உண்மை என்பதை, தற்போது முதலமைச்சரே உறுதி செய்து இருப்பதாகத் தான் இந்த அமைச்சரவை மாற்றம் நமக்கு உணர்த்துகிறது. - ஜெயக்குமார்
* . ஜிரோவும் (ஓபிஎஸ்) ஜிரோவும் (டிடிவி தினகரன்) இணைந்தால் ஜீரோ தான். டிடிவி தினகரன் ஓபிஎஸ் சந்திப்பானது காலியான கூடாரத்தில் ஒட்டகம் புகுந்ததை போன்ற நிலை தான்டிடிவி தினகரன் ஓபிஎஸ் இணைந்தது மாயமானும், மண் குதிரையும் ஒன்று சேர்ந்தது போல் தான் உள்ளது. - எடப்பாடி பழனிசாமி
* . மாநிலங்களின் நிர்வாக அதிகாரத்தை மத்திய அரசு எடுத்துக்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி கொள்கை என்பது நமது அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பின் ஒரு அங்கம் ஆகும். ஜனநாயக நாட்டில் மக்கள் தேர்ந்தெடுத்த அரசின் கைகளிலேயே நிர்வாக அதிகாரம் இருக்க வேண்டும். அதிகாரிகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளின் கையில் கொடுக்கவில்லை என்றால் அது பெரும் சிக்கலை உருவாக்கும். - உச்சநீதிமன்றம்
* எந்த முகாந்திரமும் இல்லாமல் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டது தவறு என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளதை முன்னாள் மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரே வரவேற்றுள்ளார்.
Credits : Script & Hosts : Suguna diwagar & R.Saran | Edit: | Podcast Channel executive - Prabhu Venkat | Podcast Network Head - M Niyas Ahmed