அரசர் எழுந்திருந்தார். விலகி நடந்தார். கூடத்தின் மூலையி லுள்ள வாசற்படியைத் தாண்டினார். திரும்பிப் பார்த்தார். அரசர் போவதைப் பார்க்காமல், முற்றத்து வெளிச்சத்தை பஞ்சவன் மாதேவி வழுக்கைத் தலையாய், பொக்கை வாயாய், சரிந்த முலை யாய், சுருங்கிய தோலாய், வளைந்த முதுகாய் ஒரு ஆசனத்தில் சாய்ந்த வண்ணம் வெறுமே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந் தாள். அந்தப் பார்வையில் எந்தச் சலனமும் இல்லை.